//]]>

Sunday, February 26, 2017

நெல்லியடி மத்திய கல்லூரியில் கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க கலாசார பெருமன்றத்தின் ஏற்பாட்டில் புத்தக திருவிழா!- இன்றே கடைசி நாள்


யாழ்ப்பாணம்  நெல்லியடி மத்திய கல்லூரியில் கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்க கலாசார பெருமன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை 24.02.2017 அன்று  புத்தக சந்தை ஆரம்பமானது.

இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் 26.02.2017 புத்தகச் சந்தை நிறைவடைகிறது.

ஏற்கனவே பலர் புத்தக சந்தையை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர்.  

கிடைத்தற்கரிய பல நூல்கள் இங்கு காணக் கிடைக்கின்றன.

இன்றே கடைசி நாள் என்பதால் புத்தக ஆர்வலர்கள் அனைவரும் புத்தகங்களை வந்து பார்வையிட்டு, வாங்கி பயனடைவீராக.

இந்தப் புத்தகக் காட்சியை பார்வையிட்ட எழுத்தாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,  

ஏராளமான புதிய புத்தகங்களோடு பழைய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மலைமகள், தமிழவள், அம்புலி, வானதி பாரதி போன்ற பெண் போராளிகளுடைய புத்தகங்களைப் பார்க்க கூடியதாக இருந்தது.

தவிர, கவிஞர் புதுவை இரத்தினதுரை, செங்கை ஆழியான், வரதர், நீர்வை பொன்னையன், ஜெயகாந்தன், சட்டநாதன் எனப் பல்வேறு எழுத்தாளுமைகளுடைய நூல்களைக் காணக்கூடியதாக இருந்தது. என்றார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment