//]]>

Tuesday, December 20, 2016

யாழ்.குடாநாட்டிலும் தபால் சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்பு: தபால் சேவை பாதிப்பு(Photos)


ஒன்றிணைந்த தபால் தொழிற் சங்கங்களின் முன்னணியினால் தபால் திணைக்களத்தின் இருபத்தோராயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களும் , தாபனமும் எதிர்நோக்கி வரும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தர அரசாங்கத்தை வலியுறுத்தித் தபால் சேவை ஊழியர்கள் இரண்டு நாள் தொடர்ச்சியான அடையாள வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

நேற்றுத் திங்கட்கிழமை(19) நள்ளிரவு-12 மணிக்கு ஆரம்பித்த இந்த வேலை நிறுத்தம் நாளை புதன்கிழமை நள்ளிரவு-12 மணி வரை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.

குறித்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக யாழ்.குடாநாட்டிலும்  தபால் சேவை ஊழியர்களும் இன்றைய தினம் கடமைக்குச் செல்வதைத் தவிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக யாழ்.குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தபால் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

யாழ்.பிரதம தபாலகமும் இன்று காலை முதல் பூட்டப்பட்டுக் காணப்பட்டதுடன் குடாநாட்டிலுள்ள அனைத்து உப தபாலகங்களும் பூட்டப்பட்டிருந்தன.இதனால், பொதுமக்கள் தபால் சேவையைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இதேவேளை, பொதுமக்களுக்குத் தமது வேலைநிறுத்தம் தொடர்பில் அறிவிக்கும் அறிவித்தல் பதாதைகையை பிரதம தபாலகத்தினர் பிரதம தபாலகம் முன்பாகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment