மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமத்தில் உள்ள திலகவதியார் மகளிர் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்கு 3 நேர உணவை தனது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கியுள்ளார் பிரான்ஸில் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட கந்தசாமி கமலரஞ்சன்.
கடந்த 06.02.2017 அன்று தனது 28 ஆவது பிறந்தநாளிலேயே கமலரஞ்சன் இந்த முன்மாதிரியான செயலை செய்துள்ளார்.
வெளிநாடுகளில் பல இலட்சம் செலவழித்து பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமண ஆண்டு நிறைவு விழாக்களை பெருமெடுப்பில் நடத்துபவர்கள் மத்தியில் இந்த இளைஞரின் முன்மாதிரியை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் பின்பற்ற முன்வர வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இயங்கும் சமூக நலன்புரி அமைப்பானது, கடந்தகால அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளை திலகவதியார் மகளிர் இல்லம் எனும் பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக பராமரிக்கும் பணியினை திருப்பழுகாமத்தில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பெண் பிள்ளைகள் கல்வி, விளையாட்டில் வலய, மாவட்ட, தேசிய ரீதியில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment