காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு தேசியப்பிரச்சினை ஆகும். ஆதலால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு சிறீலங்கை அரசை வலியுறுத்தி, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வவுனியாவில் கடந்த 23.01.2017 திங்கள் கிழமையிலிருந்து நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 உண்ணாவிரதிகளில் ஒருவரான நெடுங்கேணி வேலங்குளத்தைச்சேர்ந்த கனகரட்ணம் தவமணி (வயது 64) எனும் தாயார், மூன்று நாள்களாக இரத்த வாந்தி எடுத்துவந்த நிலையில் 21.02.2017 செவ்வாய்க்கிழமையிலிருந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தவமணி அம்மாவின் இரண்டு பிள்ளைகள், சிறீலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
(மகன்) கனகரட்ணம் அருட்குமார் 17 வயதிலும், (மகள்) கனகரட்ணம் ஜீவநந்தினி 22 வயதிலும் 12.05.2009 அன்று இரட்டைவாய்க்கால் பகுதியில் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவமணி அம்மாவின் மருத்துவ வசதி மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்காக உதவ விரும்புபவர்கள் சங்கத்தின் தலைவி திருமதி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை (தொலைபேசி எண்: 0094 77 330 1724) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment