//]]>

Sunday, December 24, 2017

தமிழரசுக்கட்சி- புளொட் தலைவர்கள் நெருக்கமாகவுள்ள காட்சி(Photo)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தலைமைத்துவப் பதவி வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், புளொட் அமைப்பிற்குமிடையில் அண்மைக் காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஆசனப் பங்கீடு தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிடச் சென்ற புளொட் அமைப்பின் பெண் வேட்பாளரை கடத்தித் துன்புறுத்தியமை தொடர்பில் முரண்பாடுகள் எழுந்திருந்தன.

இந்நிலையில் முஸ்லிம் கலாசார அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் எற்பாட்டில் நேற்றைய தினம்(23)  யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் தேசிய மீலாத் விழா இடம்பெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிதிகளாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். இடையிடையே கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபட்டனர். இந்தக் காட்சி இரு தரப்பினரிடையே முரண்பாடுகள் உள்ளனவா? என்பது தொடர்பில் சந்தேகிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment