றம்புட்டான் பழச் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்து யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் றம்புட்டான் பழ வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
யாழ். நகர்ப்புறப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், நல்லூர், திருநெல்வேலி, கொக்குவில், சுன்னாகம், மருதனார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் றம்புட்டான் பழ வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. ஒரு றம்புட்டான் பழம் 10 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
யாழில் கடும் வெப்பமுடனான காலநிலை நிலவி வரும் நிலையில் றம்புட்டான் பழங்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தென்னிலங்கையில் மல்வானைப் பகுதியிலிருந்தே அதிகளவான றம்புட்டான் பழங்கள் விற்பனைக்காகத் தம்மால் கொள்வனவு செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாளில் றம்புட்டான் பழ வியாபாரம் மூலம் இரண்டாயிரம் ரூபாவை இலாபமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீதியில் றம்புட்டான் பழ விற்பனையில் ஈடுபட்டு வரும் இள வியாபாரியொருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment