//]]>

Thursday, September 28, 2017

பழைய இரும்பென நினைத்து செல்லை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ஏழு வயதுச் சிறுவன்


யாழ். குப்பிளான் தெற்கு தைலங்கடவைப் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவனொருவன் பழைய இரும்பென நினைத்துப் பாரிய வெடிகுண்டை வீடு நோக்கி எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ். புன்னாலைக்கட்டுவன் மகா வித்தியாலயத்தில் தரம்-02 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன்  நேற்று முன்தினமும்(26) பிற்பகல் வழமை போன்று பாடசாலை முடிவடைந்ததும் வீடு நோக்கி நடந்து சென்றுள்ளான். அப்போது வீதியோரமாக வெடிக்காத நிலையில் காணப்பட் வெடிகுண்டொன்றை பழைய இரும்பென நினைத்து எடுத்துத் தனது பாடசாலைப் புத்தகப் பைக்குள் வைத்த பின் வீடு நோக்கி எடுத்துச் சென்றுள்ளான். 

இந்த நிலையில் தனது வீடு செல்லும் வழியில் குறித்த சிறுவனின் உறவினரான இளைஞனொருவனிடம் குறித்த வெடிகுண்டை அந்தச் சிறுவன் காட்டிய போது அந்தச் சிறுவன் எடுத்து வந்தது வெடிக்காத நிலையில்  காணப்பட்ட வெடிகுண்டென்பது தெரிய வந்தது. விரைந்து செயற்பட்ட இளைஞன் குறித்த சிறுவன் கொண்டு வந்த வெடிகுண்டை மீட்டுப் பத்திரமாக வைத்ததுடன் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் குறித்த வெடிகுண்டைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளனர். 

குறித்த சிறுவன் அந்த வெடிகுண்டை எடுத்து நிலத்தில் குத்தியிருந்தாலோ அல்லது நிலத்தில் விழுத்தியிருந்தாலோ உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதுடன் வீடு எடுத்துச் சென்றிருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment