//]]>

Saturday, September 9, 2017

யாழில் மனைவியின் தொந்தரவால் கணவர் எடுத்த விபரீத முடிவு


சம்பளப் பணம் கேட்டுத்  தனது மனைவி நாள் தோறும் தொந்தரவு செய்தமையால் கணவர் நஞ்சருந்தியமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. யாழ். உடுவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை(05) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். உடுவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குறித்த குடும்பஸ்தர் தினம் தோறும் உழைத்து வரும் சம்பளப் பணத்தினை அவரது மனைவி தினமும் கேட்டுத் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்றும் மனைவி  சம்பளப் பணத்தினைக் கேட்டுள்ளார். இதன் போது பணத்தினைக் கொடுக்க மறுத்த கணவர் தனது மனைவியுடன் சண்டையிட்டு இவ்வாறான முடிவினை எடுத்துள்ளார். 

குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment