தமிழ் ஆய்வுத் துறையின் தலைமகனாக விளங்கிய முற்போக்குச் சிந்தனையாளரும், இடதுசாரிக் கல்வி ஆளுமையுமான பேராசிரியர் க. கைலாசபதியின் 35 ஆவது ஆண்டு நினைவுக் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக் கிழமை(31) பிற்பகல்- 3.30 மணி முதல் யாழ். கொக்குவில் சந்தி எனும் முகவரியிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், தேசிய கலை இலக்கியப் பேரவை, யாழ்ப்பாணப் பிரதேசப் பேரவையின் செயலாளருமான மு. இராசநாயகம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் "பேராசிரியர் கைலாசபதியின் ஆய்வுத் தடம்" எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் நினைவுரையையும், 'தாயகம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் க. தணிகாசலம் கருத்துரையையும் நிகழ்த்தவுள்ளனர்.
இந் நிகழ்வில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் கேட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment