//]]>

Sunday, December 31, 2017

பொதுமக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்

உள்ளூராட்சித் தேர்தலில் போதைப்பொருளுக்கு அடிமையான எந்தவொரு வேட்பாளருக்கும் எந்த கட்சியிலும் வாக்குகளை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டுக்கும், எதிர்கால தலைமுறைக்கும் முன்மாதிரியை வழங்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை நாட்டுக்கும் கிராமத்திற்கும் தெரிவு செய்ய வேண்டும். 

இதுவரை காலமும் உள்ளூராட்சி நிறுவனங்கள் பௌதீகவள அபிவிருத்திக்காக மட்டுமே செயற்பட்டு வந்த போதும் இவ்வருட உள்ளூராட்சித்  தேர்தலுடன் மக்களின் பண்புகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்திச் சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்பும் விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் அதனூடாக நடைமுறைப்படுத்தப்படும். 

புதிதாகத் தெரிவாகும் நகர சபை மற்றும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளை ஒன்று சேர்த்து இதற்கு முன்பு எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத நிகழ்ச்சித்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தவுள்ளோம். நாட்டின் எதிர்காலத்திற்காகச் செயலணிகளை அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment