யாழ். எழுவைதீவு கடலில் மீன்பிடித்த பின்னர் கரை திரும்பிக் கொண்டிருந்த மீனவரொருவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த மீனவர் நேற்று முன்தினம்(17) பிற்பகல் யாழ்.குருநகரிலிருந்து எழுவைதீவுக் கடலை நோக்கி மீன்பிடிக்கச் சென்றுள்ளார். கடலில் மீன்கள் பிடித்த பின் கடற்கரை நோக்கிப் படகில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நேற்று அதிகாலை குறித்த மீனவர் பயணித்த படகின் இன்ஜினில் மீன்பிடி வலையொன்று சிக்கியுள்ளது. குறித்த வலையினை அறுப்பதற்காக கடலில் இறங்கிய போது அவருக்குத் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
சகமீனவர்கள் குறித்த மீனவரை மீட்டு ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 56 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
0 comments:
Post a Comment