யாழ். காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் 45 ஆவது ஆண்டு விழா நேற்றுச் சனிக்கிழமை(16) பிற்பகல்-05 மணி முதல் மறுமலர்ச்சி மன்றத்தின் தியாகராசா மகேந்திரன் குடும்ப ஞாபகார்த்த உள்ளரங்கத்தில் இடம்பெற்றது.
மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும், சாவகச்சேரி மற்றும் தீவகக் கல்வி வலயங்களின் வலயக் கல்விப் பணிப்பாளருமான சு. சுந்தரசிவம் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தொழிலதிபரும், மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினருமான தி. யோகேஸ்வரன், அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் பிரபல கட்டட வடிவமைப்பாளரும், மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினருமான அ. சந்திரஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
விழாவில் விசேட கலை நிகழ்வுகளாக யாழ். வட்டுக் கோட்டை கார்த்திகேசு வித்தியாலய மாணவர்கள் வழங்கும் பொம்மலாட்ட நடனம், நாடக அரங்கக் கல்லூரியின் "தான் விரும்பாத் தியாகி" நகைச்சுவை நாடகம், கிளிநொச்சி கல்லாறு தமிழ் வித்தியாலய மாணவர்களின் 'புதிதாய் வாழ்வோம்' நாடகம், செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் "உயிர்களின் விலை என்ன?" சமூக விழிப்புணர்வு நாடகம், பாசையூர் புனித அந்தோனியார் கலைக் கழகத்தினரின் வீர பாண்டிய கட்டப்பொம்மன் நாட்டுக் கூத்து உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
0 comments:
Post a Comment