யாழ். வலி கிழக்குப் பண்பாட்டுப் பேரவை, கோப்பாய் பிரதேச செயலகம், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்த பண்பாட்டு விழா நேற்று (22) மாலை ஆவரங்கால் ஆதவன் மண்டபத்தில் பேரவையின் பதவிவழித் தலைவரும் பிரதேச செயலருமாகிய சுபாஜினி மதியழகன் தலைமையில் கலாபூஷணம் வே.இளையகுட்டி அரங்கில் நடைபெற்றது.
.
இந்த விழாவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சங்கானைப் பிரதேச செயலர் பிறேமினி பொன்னம்பலம், யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை தலைவர் கலாநிதி- சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், முதலமைச்சர் விருதுபெற்ற கலைஞர்களான நீர்வேலியூர் சிற்பத் திலகம் செ.விஸ்வலிங்கம், அச்சுவேலியூர் சங்கீதபூஷணம் வ.செல்லத்துரை ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
.
கவிஞர் வே.இளையகுட்டியின் நினைவுகளைத் தாங்கிய அரங்கச் சிறப்புரையை பண்பாட்டுப் பேரவையின் உபதலைவர் ச.லலீசன் மேற்கொண்டார்.
.
குறித்த விழாவில் மூத்த கலைஞர்களான நா.யோகேந்திரநாதன் (நீர்வேலி), ந.சிவசுப்பிரமணியம் (செட்டியார் - நீர்வேலி), இ.கனகரத்தினம் (கல்வியங்காடு), ஆ.மகாலிங்கம் (ஊரெழு), த.பரராசசிங்கம் (நீர்வேலி), சு.சண்முகம் (கோப்பாய்), இ.சுந்தரலிங்கம் (உரும்பிராய்), சி.இரத்தினசிங்கம் (அச்சுவேலி) ஆகியோர் செம்புலக்குரிசில் எனும் சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment