காங்கேசன்துறை தொடக்கம் பொத்துவில் வரை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் சம உரிமை இயக்கம் உள்ளுராட்சி சபைகளுடாக முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள் அடங்கிய முன்மொழிவுகளை இன்று சனிக்கிழமை(30) பிற்பகல்-02 மணியளவில் யாழ்.காங்கேசன்துறையில் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யத் தீர்மானித்துள்ளது.
மேற்படி இயக்கத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டமும் இன்று காங்கேசன்துறையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
தமிழர் சம உரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளரும், வலி.வடக்குப் பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான தாயுமானவர் நிகேதன், வலி.மேற்குப் பிரதேச சபை வேட்பாளரும், ஊடகவியலாளருமான ந.பொன்ராசா, காரைநகர், பூநகரி, மாந்தை மேற்கு, வவுனியா, மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளுக்காகப் போட்டியிடும் வேட்பாளர்கள் வலி.வடக்கு வேட்பாளர்களுடன் இணைந்து இந்த வைபவத்தில் கலந்துகொள்வார்கள்.
0 comments:
Post a Comment