//]]>

Thursday, December 28, 2017

வலி.தெற்குப் பிரதேச பொதுமக்களிடம் பகிரங்க வேண்டுகோள்

பொதுமக்கள் எதிர்வரும்-2018 ஆம் ஆண்டில் சபைக்குச் சேர வேண்டிய ஆதனவரிகளைச் சபைக்குச் செலுத்தித் திட்டமிட்ட அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவும், இதன் ஊடாகப் பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யவும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதேசப் பொதுமக்களிடம் வலி.தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் ரி. சுதர்சன் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

யாழ். வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றங்கள் வருமானத்தை ஈட்டி அவ் வருமானத்தின் மூலம் தமது அபிவிருத்திப் பணிகளைச் செயற்படுத்தும் ஓர் அமைப்பாகும். சபையின் வருமானத்தில் ஆதனவரியே பெரும் பங்கு வகிக்கிறது

பிரதேச மக்கள் வீதிப் புனரமைப்பு, தெருவிளக்குப் பொருத்துதல்  போன்ற கோரிக்கைகளினைச் சபைக்கு முன்வைக்கின்ற போதும் பொதுமக்கள் எவரும் சபைக்குச் சேர வேண்டிய ஆதனவரிகளைச் செலுத்துவதில்லை. இதனால், சபைக்குச் சேர வேண்டிய பல மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெறுவதில்லை. இதன் காரணமாக இவ்வருமானத்தை எதிர்பார்த்து முன்மொழியப்பட்டுள்ள வேலைத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய்விடும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment