2 ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் இந்தியாவின் டெல்லியிலிருந்து நேற்றைய தினம்(23) சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
சென்னை விமானநிலையத்திலிருந்து கோபாலபுரம் இல்லம் நோக்கிப் புறப்பட்ட இருவரும் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். கனிமொழி கருணாநிதி அருகில் சென்றதும் அவர் தன் மகளைப் பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் சிரித்தார். கனிமொழி தனக்கு அணிவித்த மலர் மாலையைக் கருணாநிதிக்கு அணிவித்து மகிழ்ந்தார். தன் தந்தையின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டதுடன் கண்கலங்கினார்.
பதிலுக்கு கருணாநிதியும் மகளின் கன்னத்தை அன்பாகக் கிள்ளி முத்தமிட்டுச் சிரித்தார். பின்னர் கனிமொழியை அழைத்துக் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு ஆசி வழங்கினார். இந்தக் காட்சி அருகிலிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.
இதேவேளை, உடல்நலக் குறைவு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த தி.மு. க தலைவர் கருணாநிதி தனது மகளின் விடுதலையைத் தொடர்ந்து தேறி வருவதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment