//]]>

Thursday, January 25, 2018

13 சிங்கள மாணவர்களுக்குப் பிணை வழங்கிய யாழ். நீதவான்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இரு மாணவர்களைத் தாக்கிய பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருடத்தைச் சேர்ந்த 13 சிங்கள மாணவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சி. சதீஸ்தரன் இன்று வியாழக்கிழமை(25) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட நான்காம் வருட சிங்கள மாணவர்கள் இருவர் மீது மூன்றாம்  வருட சிங்கள மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை(18) இரவு பல்கலைக்கழகத்தின் முன்பாக வைத்துத் தாக்குதல் மேற்கொண்டனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள்  மேற்கொண்ட கோப்பாய்ப் பொலிஸார் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நான்கு சிங்கள மாணவர்களைக் கைது செய்தனர்.

அவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்றுவரை(25) விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களெனச் சந்தேகிக்கப்படும் மூன்றாம் வருடத்தைச் சேர்ந்த ஒன்பது சிங்கள மாணவர்கள் கோப்பாய்ப் பொலிஸ்  நிலையத்தில் நேற்றைய தினம்(24) சரணடைந்தனர். குறித்த ஒன்பது மாணவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 13 மாணவர்களும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது 13 மாணவர்களையும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment