எதிர்வரும்-08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யாழ். மாவட்டச் செயலகமும், பாலியல் வன்முறை சார் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியை நேற்று புதன்கிழமை(01) யாழ்.மாவட்டத்தில் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது. குறித்த பேரணி காலை-09 மணியளவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகனால் யாழ்.நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்.பிரதான பேருந்து பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பமாகிய குறித்த பேரணி யாழ். ஆஸ்பத்திரி வீதி வழியாக ஏ-9 வீதியை வந்தடைந்து அதன் ஊடாக யாழ். மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது.
இந்த மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம், உதவி அரசாங்க அதிபர் முரளிதரன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் திருமதி- விஜயலட்சுமி கேதீஸ்வரன், பொலிஸ் அதிகாரிகள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் பெண்களின் உரிமைகள் தொடர்பாகவும், பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கக் கோரியும் பல்வேறு பதாதைகளைத் தங்கியிருந்தனர். இந்தப் பேரணி யாழ்.மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.
0 comments:
Post a Comment