நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம்....அல்லாவிடில் நான் உங்களிடம் கேள்வி கேட்க வேண்டி வரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஊடகவியலாளர்களை நோக்கி மிரட்டும் வகையில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபைத் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திங்கட்கிழமை(22) பிற்பகல் யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு மிரட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் ஊடகவியலாளர்கள் எம்மிடம் கேள்வி கேட்கலாம்...ஆனால், நினைத்தவாறு எல்லாக் கேள்விகளும் கேட்க முடியாது எனக் கட்டுப்பாடு விதித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment