//]]>

Monday, January 22, 2018

வேட்பாளர்,வாக்காளர்களுக்கு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதியின் எச்சரிக்கை

மேல்நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குட்பட்ட பகுதி நபர்கள் தேர்தல் வன்முறையின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டால் அவர்கள் வாக்காளராக இருந்தாலென்ன? வேட்பாளர்களாக இருந்தாலென்ன ? அவர்களைத் தேர்தல் முடியும் வரை விளக்கமறியலில் வைக்க வேண்டிய சூழல் ஏற்படும். பிணை வழங்க முடியாது என யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

54 கிலோ கஞ்சாப் போதைப் பொருளைத் தம் வசம் வைத்திருந்தமை மற்றும் கோழி இறைச்சிக்குள் போதைப்பொருளை மறைத்து யாழ்.சிறைச்சாலைக்குள் கொண்டு சென்றமை  ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிணை விண்ணப்பங்கள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை(22) விசாரணைக்கு வந்த போதே அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment