யாழ். மானிப்பாய் கட்டுடைப் பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து முதியவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய்ப் பொலிஸார் இன்று(24) தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தனது சொந்த வயலுக்குச் சென்று வருவதாகக் கூறி நேற்று(23) முற்பகல் வீட்டிலிருந்து புறப்பட்ட குறித்த முதியவர் பிற்பகல-02 மணி வரையும் மத்திய உணவுக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து உறவினர்கள் வயலுக்குச் சென்று தேடியுள்ளனர். இதன் போது குறித்த முதியவர் அணிந்திருந்த செருப்பு அங்கிருந்த வயல் கிணறுக்கு அருகில் காணப்பட்டுள்ளது. கிணற்றினை எட்டிப் பார்த்த போது குறித்த முதியவர் சடலமாகக் கிணற்றில் மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று விசாரணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உடற்கூற்று விசாரணையைத் தொடர்ந்து இன்றைய தினம்(24) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் கட்டுடையைச் சேர்ந்த ஆறுமுகம் கணேசமூர்த்தி(வயது-64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment