கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக சொகுசு புகையிரதத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக இன்றைய தினம்(15) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் பயணிகள் மற்றும் புகையிரத சாரதிகள் எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.
குறித்த புகையிரதம் நேற்றுப் பிற்பகல் யாழ். மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் வந்துகொண்டிருந்த போது புகையிரதத்தின் பின்பகுதியிலுள்ள இயந்திரப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் புகையிரதத்தில் ஏற்பட்ட கோளாறு தீ அணைப்புப் படையினரும், தொழில்நுட்ப வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு உடனடியாகக் கண்டறியப்பட்டதுடன் புகையிரதம் சடுதியாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மேற்படி புகையிரதத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பயணிகள் அனைவரும் பேருந்துகளில் ஏற்றப்பட்டு யாழ். நகரம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் பின்னர் புகையிரதம் மீண்டும் யாழ். நகரம் நோக்கிப் பயணித்தது
0 comments:
Post a Comment