//]]>

Tuesday, January 16, 2018

மலையகமெங்கும் பட்டிப்பொங்கல் விமரிசை (Photos)

இயற்கைக்கும், ஜீவனோபாயத்துக்கும் உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறுவது எம்முன்னோர்களின் பாரம்பரிய முறையில் இருந்து வந்த ஒரு மரபாகும். அந்த மரபை தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வரும் விழாவாக இந்த பட்டிப்பொங்கல் விழா நேற்றுத் திங்கட்கிழமை(15) மலையகமெங்குமுள்ள கால்நடை வளர்ப்பாளர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நேற்றுக் காலை முதல் தமது கால்நடைகளை நன்கு சுத்தம் செய்து பசுக்களுக்கு மாலை அணிவித்து வர்ணங்கள் பூசி அலங்கரித்து பட்டு மாலை சாத்தி உணர்வுபூர்வமாக அவைகளுக்கு நன்றிகள் செலுத்தினர்.

நேற்றைய நாளில் சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் பொங்கி குடும்பத்திலுள்ள அனைவரும் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது கால்நடைகளுக்கும் ஊட்டி மகிழ்ந்தனர்.
(க.கிஷாந்தன்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment