//]]>

Monday, January 8, 2018

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் புதுவருடப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு(Photos)


வடமாகாண ஆளுநர் செயலகத்தின் புதுவருடத்துக்கான பணிகளை சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(08) முற்பகல் யாழ். சுண்டுக்குளியிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடமாகாண  அமைச்சர்களான க. சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவநேசன், குணசீலன், வடமாகாணசபை உறுப்பினர்கள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட ஒன்பது மாணவ, மாணவிகள் பதக்கங்கள் அணிவித்தும், பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment