கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரக்கறிகள் 200 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் குடாநாட்டின் பல பகுதிகளிலுமிருந்தும் சந்தைகளிற்கு மரக்கறிகள் வரத்து அதிகரித்துள்ளமையே மரக்கறி விலைகளின் திடீர் வீழ்ச்சிக்குக் காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழின் முக்கிய சந்தையாகக் கருதப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்றைய(22) மரக்கறி விலை நிலைவரப்படி,
ஒரு கிலோ பச்சை மிளகாய் 100 ரூபா முதல் 120 ரூபா வரை, ஒரு கிலோ கத்தரி 80 ரூபா முதல் 100 ரூபா வரை, ஒரு கிலோ வெண்டி- 100 ரூபா, ஒரு கிலோ கத்தரிக்காய்- 80 ரூபா முதல் 100 ரூபா வரை, ஒரு கிலோ கரட்-80 ரூபா, ஒரு கிலோ புடலங்காய்- 70 ரூபா முதல் 80 ரூபா வரை, ஒரு கிலோ பீற்ரூட்- 50 ரூபா முதல் 60 வரை, ஒரு கிலோ உருளைக்கிழங்கு- 60 ரூபா, ஒரு கிலோ பூசணி- 50 ரூபா, ஒரு கிலோ தக்காளி- 40 ரூபா முதல் 50 ரூபா வரை, ஒரு கிலோ முள்ளங்கி 40 ரூபா முதல் 50 ரூபா வரை, ஒரு கிலோ 40 ரூபா முதல் 50 ரூபா வரை, ஒரு கிலோ கோவா 40 ரூபா முதல் 50 ரூபா வரை, ஒரு கிலோ கருணைக்கிழங்கு 40 ரூபா முதல் 50 ரூபா வரை, ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு- 30 ரூபா முதல் 40 ரூபா வரையும் விற்பனை செய்யப்பட்டன.
இதேவேளை, யாழ்.மாவட்டத்தின் ஏனைய சந்தைகளிலும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளது. ஆயினும், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பயிற்றங்காய் பயிற்றங்காய், பாகற்காய், லீட்ஸ் ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ். ரவி-)
0 comments:
Post a Comment