எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியுமெனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடமாட முடியாத மாற்றுத் திறனாளிகள் தமது வாக்குகளை அளிப்பதற்கு உதவியாக இலவச போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவுள்ளது. எனவே, அதற்கான விண்ணப்பங்களை உரிய மருத்துவ அறிக்கையுடன் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகக் கையளிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேரடியாகவோ,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லாத ஒருவர் மூலமோ விண்ணப்பிக்க முடியும்வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல் . விண்ணப்பங்களைத் தமது பிரதேச தேர்தல் அத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கவேண்டும்.
பிரதேசத் தேர்தல் அத்தாட்சி அதிகாரி ஒப்புதலளிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment