//]]>

Monday, February 5, 2018

காணாமல் போனவர்கள் ஒழித்து வைக்கப்படவில்லை!:யாழில் மைத்திரி(Photo)

வடக்கில் காணாமற் போனோர் பிரச்சினை பல காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. காணாமல் போனோரின் உறவினர்கள் இங்கும் கொழும்பிலும் வந்து என்னை சந்தித்தனர். காணாமல் போனவர்கள் நாட்டில் ஒழித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். நான் இது  தொடர்பில் விசாரித்துப் பார்த்தேன். ஆனால், காணாமல் போனவர்கள் எவரும் நாட்டில்  ஒழித்து வைக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ். மாநகர சபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (05) மதியம் இடம்பெற்ற போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்கள் வடக்கில் மட்டுமல்ல யுத்தத்தின் போது தெற்கிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் காணாமல் போனார்கள். எனவே நான் முடிந்ததை செய்வேன் எனக்கு ஒழித்து வைக்க தெரியாது வெளிப்படையாக பேசுவேன்.

காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு எம்மால் இயன்ற நிதி உதவிகளைச் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

(தமிழின் தோழன்-)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment