தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை(06) பிற்பகல் -05 மணி முதல் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் யாழ் வருகை தரவுள்ளார்.
இந்தநிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், புளொட் அமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளர் ந.ஸ்ரீகாந்தா, வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.
எனவே, இந்தப் பொதுக் கூட்டத்தில் அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வீ.கே. சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment