உள்ளுராட்சி சபைத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் யாழ். மாவட்டத்தில் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் யாழில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து மும்முரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீதிகளில் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் வரையப்பட்டுள்ளதுடன் ஏட்டிக்குப் போட்டியாக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஏழாலை கிழக்குப் பகுதியில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் கல்லறைகள் அமைந்துள்ள மயானமொன்றில் வேட்பாளர்கள் சிலர் தங்கள் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளமையைக் காண முடிகிறது.
அத்துடன் குறித்த மயானத்துக்கு முன்பாகவுள்ள வீதியில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்களும் வரையப்பட்டுள்ளமையை அவதானிக்கக்
கூடியதாகவுள்ளது.
அதுமாத்திரமன்றி குப்பிளான் தெற்கிலுள்ள காடாகடம்பை இந்து மயானம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் சில கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment