தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(06) யாழ். ஏழாலையில் இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல்-03 மணி முதல் யாழ். ஏழாலை வடக்கு இலந்தைகட்டி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ள குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவே, குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏழாலை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பிரதேசப் பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களைத் தவறாது கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரசாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் ஒரு கட்டமாக விசேட இன்னிசை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment