மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை(06) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை(06) காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ். மாவட்டத்தின் மண்டைதீவு, மண்டைதீவு வேலுசுமண இலங்கை கடற்படை முகாம் , மண்கும்பான், மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், அல்லைப்பிட்டி, வேலணையின் ஒரு பகுதி அச்செழு, மாசிவன் சந்தி ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் ஆசிக்குளம், கோவில்குளம், சிதம்பரபுரம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்குளம், பெரிய கூமரசங்குளம், அட்டம்பஸ்கட கிராமம், தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் கிராமம் ஆகிய பகுதிகளிலும்,
காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் புதுக்காமம், வட்டுப் பித்தன்மடு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment