//]]>

Sunday, November 27, 2016

கொலை செய்ய அமெரிக்கா 638 முறை முயற்சி


’கொலை முயற்சிகளில் இருந்து அதிகமுறை தப்புபுவர் என்ற பிரிவில் ஒலிம்பிக்கில் ஒரு போட்டி நடத்தினால் அதில் நான் தங்கப் பதக்கம் வெல்வது உறுதி’ என்று ஃபிடல் காஸ்ட்ரோ ஒருமுறை கூறினார்.

கியூபாவை 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அவரை கொலை செய்ய அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பு 638 தடவை முயற்சி செய்துள்ளது. காஸ்ட்ரோவின் காதலி மரிடா லோரன்ஸை ஆசைவார்த்தை கூறி மயக்கிய சிஐஏ அவரை தங்களது உளவாளியாக மாற்றியது. காஸ்ட்ரோவை கொல்வதற்காக விஷ மாத்திரைகளுடன் மரிடா லோரன்ஸ் அமெரிக்காவில் இருந்து கியூபாவுக்கு வந்தார்.

இந்தத் தகவல் முன்கூட்டியே காஸ்ட்ரோவுக்கு தெரிந்துவிட்டது. திட்டமிட்டபடி காஸ்ட்ரோவை மரிடா சந்தித்தார். அப்போது மரிடாவின் கையில் துப்பாக்கியை கொடுத்த காஸ்ட்ரோ, என்னை கொல்ல விரும்பினால் தாராளமாக சுடலாம் என்று கூறினார். இதில் வெட்கித் தலைகுனிந்த மரிடா துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு மண்டியிட்டு அழுதார். காஸ்ட்ரோ புகைக்கும் சுருட்டுக்கு பதிலாக விஷ சுருட்டை சிஐஏ உளவாளிகள் வைத்தனர்.

இதேபோல மருந்து மாத்திரைகள், உணவுகளிலும்கூட விஷத்தை கலந்து அவரை கொலை செய்ய சிஐஏ முயற்சி செய்தது. அவரது காலணியில் நச்சு ரசாயனத்தை வைக்கவும் சிஐஏ முயன்றது. ஆனால் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருந்த காஸ்ட்ரோ ஒவ்வொரு முறையும் கொலை முயற்சிகளில் இருந்து உயிர் தப்பினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment