நாடாளாவிய ரீதியில் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும்- 26 ஆம் திகதி வரை பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
இந்நிலையில் விண்ணப்பம் உள்ளடங்கிய கையேடு நேற்று(05) முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையின் மூலம் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு 30 ஆயிரத்து 500 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment