யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை காலை யாழ். மாநகரசபை மைதானத்தில் ஆரம்பமானது. நாளை ஞாயிற்றுக்கிழமை 28 ஆம் திகதியுடன் கண்காட்சி நிறைவடைகிறது. யாழில் 9 ஆவது தடவையாக இடம்பெறும் இக்கண்காட்சியில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
பல தென்னிலங்கை நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும், வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுகைத்தொழில் முயற்சியாளர்களும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் உள்ள பழமை வாய்ந்த வல்வை நெசவாலையும் (இலங்கை நூற்றல் நெய்தல் ஆலை) இக்கண்காட்சியில் முதன்முறையாக பங்கேற்றுள்ளது. 1960 களில் வல்லை நெசவாலை நூற்றுக்கணக்கானோருக்கு தொழில்தருமிடமாகவும், இலங்கை முழுவதும் இதன் உற்பத்திகளின் தரம் மக்களால் பேசப்பட்டு வந்தன. போரின் பின்னர் படையினரின் முகாமாக விளங்கிய நெசவாலை மக்களால் மீட்கப்பட்டு இப்போது இயங்கி வருகிறது.
கனடா உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தினால் கனடா வாழ் உடுப்பிட்டி உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் இந்த ஆடைத்தொழிற்சாலை வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. ஆண்கள், பெண்களுக்கான ஆடைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகளை கண்காட்சியில் மலிவான விலையில் பெற்றுக் கொள்ளலாம். கண்காட்சியில் விசேட விலைக்கழிவில் ஆடைகள் விற்கப்பட்டு வருவதால் மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகிறார்கள்.
அலுவலகங்கள், விளையாட்டுக்கழகங்களுக்கு தேவையான ரீசேட்டுக்களையும் எம்பிராய்டரி செய்து விசேட விலைக்கழிவில் பெற்றுக் கொள்ளலாம்.
இலங்கை நூற்றல் நெய்தல் ஆலையினால் வடிவமைக்கப்படும் ஆடைகளை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Nlite என்கிற வர்த்தக நாமமும் மக்களிடம் பிரபலமாகி வருகிறது.
வல்லை நெசவாலையானது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், வடமாகாண மக்களின் ஆடைத்தேவையை நிறைவு செய்யும் நோக்கிலும் தரமான ஆடைகளைத் தயாரித்து நியாயவிலையில் குறித்தநேரத்தில் வழங்குவதில் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது.
நவீன இயந்திரங்கள் நிறுவப்பட்டு பயிற்சிபெற்ற தையலர்களால் தரமான ஆடைகள் Nlite என்னும் வர்த்தக நாமத்துடன் (சின்னம்) தயாரித்து விற்கப்படுகின்றன.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம். தமிழ்மக்களின் பொருளாதாரத்தை உயரச் செய்வோம்.
மக்களால் மக்களுக்காக நடாத்தப்படும் வடக்கின் முதல் ஆடைத்தொழிற்சாலை:
தொடர்புகளுக்கு - 077 66 88 555
0 comments:
Post a Comment