//]]>

Sunday, November 27, 2016

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுட்டிப்பு (Photos)

யாழ். வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில்...  

தமிழின விடுதலைப் போரில் களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக மக்கள் பங்களிப்புடன் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில் நல்லூரிலும், கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல முன்றலிலும், வல்வெட்டித்துறையில் உள்ள புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் நினைவிடத்தில்  சிவாஜிலிங்கம் ஏற்பாட்டிலும், யாழ். பல்கலையில் பொங்குதமிழ் நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்களினாலும், சாட்டியில் சரவணபவன் எம்.பி ஒருங்கிணைப்பிலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறையில்  ஜனநாயக போராளிகள் கட்சி ஏற்பாட்டிலும், யாழ். கந்தர்மடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓருங்கிணைப்பிலும், யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்திலும்  மாவீரர் நினைவு நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

கடந்த காலங்களில் சிறீலங்கா அரசின் இராணுவ இயந்திரத்தினால் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுமக்களால் துப்பரவாக்கப்பட்டு  இன்று அஞ்சலி நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் இடம்பெற்றன.

மாவீரர்களை நினைத்து உறவுகள் பெருத்த ஏக்கங்களுடனும், கனத்த மனதுடனும் கதறி அழுத காட்சிகள் என்றும் எம் நெஞ்சை விட்டு அகலாது.

பெரும்பாலான இடங்களில் இராணுவப் புலனாய்வாளர்களின் நடமாட்டமும் சில இடங்களில் அச்சுறுத்தலும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில்... 






தற்போது இராணுவ முகாம் அமைந்துள்ள யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல முன்றலில்...


யாழ். பல்கலையில் பொங்குதமிழ் நினைவுத் தூபிக்கு முன்னால்...



யாழ். கந்தர்மடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்... 





யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்... 



யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபி முன்றலில்...  



யாழ். சாட்டி கடற்கரையில்... 
Add caption
வல்வெட்டித்துறை, முதல் மாவீரன் சங்கர் நினைவிடத்தில்... 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment