//]]>

Wednesday, November 16, 2016

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு


யாழ்ப்பாணம் அன்பொளி கல்வியகத்தில் கல்வி கற்று இந்த வருடம் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 460  பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா யாழ். நாச்சிமார்கோவிலடி சரஸ்வதி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(12-11-2016) பிற்பகல்-02.30 மணி முதல் நடைபெற்றது.  

மேற்படி, கல்வியகத்தின் இயக்குநர் மு.வே. அன்பழகன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் வே. ஞானகாந்தன் தம்பதியர் பிரதம விருந்தினராகவும், யாழ்.கல்வி வலய ஆரம்பக் கல்வி முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.குகதாசன் தம்பதியர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். 

விழாவில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் ஆசியுரை நிகழ்த்தியதுடன்,  தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் க.க. ஈஸ்வரன் வாழ்த்துரையையும் வழங்கினர். இதன் போது புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்ற 460 மானவர்காளுக்குப் பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். 

விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment