//]]>

Tuesday, November 29, 2016

மணிக்கட்டு முறிந்தது: நீதிபதி இளஞ்செழியன் முன் மாவை சாட்சியம்


“எனக்கு முதலில் அடித்தார்கள். இரண்டாவது முறை அடித்த போது கையால் தடுத்தேன். மூன்றாவது முறை தாக்கப்பட்ட போது எனது இடது கையினால் தடுத்தேன். அதனால் எனது மணிக்கட்டு முறிந்தது.

அவ்வாறு தடுத்தபடியால் தான் நான் உயிர்பெற்றிருக்கிறேன் என நினைக்கிறேன். நெப்போலியனின் அடியாட்களினால் நாம் தாக்கப்பட்டோம்.

அப்போது நெப்போலியனின் மாவை சேனாதிராஜாவை தாக்குங்கள் என்ற குரல் கேட்டது.

என் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி அடித்து நொருக்கப்பட்டது” என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய மாவை சேனாதிராஜா, சாட்சியமளித்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தாக்குதல் நடாத்தி இருவரை படுகொலை செய்த வழக்கு விசாரணை 14 வருடங்களின் பின்னர், யாழ் நீதிமன்றில் திங்கட்கிழமை (28) ஆறாவது நாளாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வரும் விசாரணையில் மாவை சோனாதிராஜாவின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நாகலிங்கம் நிசாந்தன் சாட்சியினை நெறிப்படுத்தியிருந்தார்.

சிவாஜிலிங்கம் ஓடுகிறான்: அவனைக் கொல்லுங்கள்!- கத்திய நெப்போலியன்

“சிவாஜிலிங்கம் சிவப்பு சேட்டுடன் ஓடுகின்றான், அவனை கொல்லுங்கள் கொல்லுங்கள் என நெப்போலியன் கத்தினான். அந்தநேரம் பற்றைக்குள் இருந்து துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாக கேட்டன.

எனது காலில் குண்டு பாய்ததனால் தொடாந்து ஓடமுடியாமல் போனது. நிலத்தில் வீழ்ந்து ஊர்ந்து, ஊர்ந்து சென்றேன்” இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment