//]]>

Tuesday, November 29, 2016

பேஸ்புக்கில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன்!- மனம் திறந்தார் ஜனாதிபதி (Photos)


பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தான் கடுமையாக விமர்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படும் சுதந்திரம் காரணமாக சமூக வலைத்தளங்கள், பத்திரிகை மற்றும் வானொலியில் தான் விமர்சிக்கப்படுவதாக மக்களுக்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை நகரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை மேம்படுத்தல் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (26) பிற்பகல் பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது.

அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, 

அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அவ்வாறு விமர்சித்தாலும் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை நிறைவேற்றுவேன். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு நிறைவேற்றப்படும்.

இலஞ்சம், ஊழல் முறைக்கேடு அற்ற ஆட்சியை கொண்ட நாடாக இந்த நாடு மாற்றமடையும். என்னை ஜனாதிபதியாக்கிய மக்களின் முதல் எதிர்பார்ப்பு அதுவாகும்.

இன்றைய தினம் பேஸ்புக்கை பார்த்தால் ஜனாதிபதி எவ்வாறு விமர்சனத்திற்குள்ளாகின்றார் என தெரியும். எனினும் அந்த சுதந்திரம் தொடர வேண்டும். எனினும் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment