//]]>

Thursday, December 8, 2016

வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் ஒரு வாரத்தில் மாத்திரம் 32 பேருக்கு டெங்கு

வலி. தென்மேற்குப் பிரதேசத்தில் ஒரு வாரத்தில் மாத்திரம் 32 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனையடுத்து இந் நோயை மேலும் பரவ விடாமல் கட்டுப்படுத்துவதற்குச் சுகாதாரப் பிரிவினர் முன்வந்துள்ளனர். புகையூட்டல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர். 

வலி. தென்மேற்குப் பிரதேசத்தில் ஆனைக் கோட்டை, மானிப்பாய், உயரப்புலம், சாவல்கட்டு ஆகிய பகுதிகளில் நோயாளர்கள் இனங்காணப்பட்டமையையடுத்து சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் வீடு வீடாகச் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment