//]]>

Thursday, January 5, 2017

யாழில் பிடிபட்டான் சைக்கிள் திருடன்

யாழ்.குடாநாட்டில் பல்வேறு சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்ட நபரொருவரை இன்று வியாழக்கிழமை(05) பொலிஸார் கைது செய்ததுடன் திருடப்பட்ட சைக்கிள்களையும் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலங்களாக இடம்பெற்று வந்த பல சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட குறித்த நபரைப் பொலிஸார் தேடி வந்துள்ள நிலையில் இன்று காலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ். அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரிற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து யாழ்ப்பாணம் கோப்பாய்ப்  பகுதியிலுள்ள வீடொன்றினுள் 26 வரையான சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த நிலையில் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் நடாத்திய விசாரணைகளின் மூலம் மேலும் 30 சைக்கிள்களை  மறைத்துவைத்துள்ளதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், நாளைய தினம் குறித்த சைக்கிள்கள் அனைத்தும் தம்மால் மீட்கப்படும் எனவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment