//]]>

Wednesday, December 28, 2016

சமஷ்டி அரசியல் அமைப்பு, வடக்குக் கிழக்கு இணைப்பு- சம்பந்தனும் சுமந்திரனும் ஏன் பேசவில்லை?(Photo)

வழிகாட்டுதல் குழுவிலிருக்கிற நாங்கள் தெரிவு செய்து அனுப்பிய தமிழ்மக்களின் தலைவர் என்று சொல்லப்படக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரனும் சமஸ்டி அரசியல் அமைப்பு முறைமை வேண்டுமென்றோ இல்லாவிடில் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்றோ எந்தவிதக்  கோரிக்கைகளையும் முன்வைக்காமை என்பது சங்கடத்துக்குரிய விடயம். நீங்கள் இருவரும் ஆங்கிலம் தெரிந்தவர்கள், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லக் கூடியவர்கள். இவ்வாறான நிலையில் கூட்டமைப்பு இவை தொடர்பாக ஒரு விதக்  கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை எனச் சிங்களத் தரப்பிலிருந்து மிகவும் தெளிவாகச் சொல்லப்படுகிறது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை(28) நண்பகல்-12 மணி முதல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்றம் அமைத்திருக்கின்ற அரசியல் சாசன மாற்றத்திற்கான 22 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் சம்பந்தன் , சுமந்திரன் ஆகிய கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய உறுப்பினர்களும் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் வழிகாட்டல் குழுவின் மூலமாக எந்தவிதக்  கோரிக்கைகளையும் முன்வைக்காதது ஏன்?

எங்களை ஏமாற்றக் கொழும்பு முயன்றால் அரசை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிடுகிறார். அவ்வாறெனில் அரசாங்கம் இதுவரை என்ன செய்து கொண்டிருக்கிறது என அவர் கருதுகிறார்.

சுமந்திரன் வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது எனக் கூறியிருப்பது ஏமாற்றமில்லையா? ஜனாதிபதி, பிரதமர், ஐக்கியதேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் உயர்மட்டக் குழு, ஜே.வி என்பன  ஒற்றையாட்சியில்லை, பெளத்தத்திற்கு முன்னுரிமை, வட- கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை எனச் சொல்வது யாவும் பொய்யா? அவ்வாறெனில் நீங்கள் இதுவரை ஏமாற்றப்படவில்லையா?

அண்மையில் என்னுடைய கட்சி சார்பாகக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் சம்பந்தனுக்கு ஒரு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் உடனடியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டப்பட்டு ஒற்றையாட்சி, பெளத்தத்திற்கு முன்னுரிமை ஆகிய விடயங்கள் குறித்துப் பேச வேண்டும்.  மக்களின் ஆணைக்கேற்ப சரியான முடிவுகள் எட்டப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்றுவரை இதற்கான எந்தவித முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment