யாழ். ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணய சங்கத்தின் கூட்டுறவாளர் தின விழா கடந்த சனிக்கிழமை(24) பிற்பகல்-03.15 மணி முதல் ஏழாலை மேற்கு முத்தமிழ் மன்றக் கலாசார மண்டபத்தில் செல்வகிரீசன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த விழாவில் வடமாகாண விவசாய, கூட்டுறவு மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி- மதுமதி வசந்தகுமார் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், வடமாகாண சபை உறுப்பினர் பாலச் சந்திரன் கஜதீபன், யாழ்.மாவட்டக் கூட்டுறவுச் சபைத் தலைவர் சி.சுந்தரலிங்கம், யாழ். மாவட்டக் கூட்டுறவுச் சபைச் செயலாளர் திருமதி - செ.வேதவல்லி, ஏழாலை முத்தமிழ் மன்றத் தலைவர் நா.இலட்சுமி காந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்

இதன் போது கூட்டுறவாளர்கள் மற்றும் பொதுச் சேவையாளர்கள் ஆறு பேர் பொன்னாடை போர்த்தியும், விருதுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டனர்.
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கணேஷ் சுரேஷ் பாபு, சற்குணசிங்கம் பிரேமன், மூத்த கூட்டுறவாளர்களான திருமதி- சுரேகா கனகம்மா, ஜெயசிறீ சிவப் பிரகாசம் பத்மநாயகி, நாடகாசிரியர் இ.பாலசிங்கம், கலாபூஷணம், புராணபடன வித்தகர் க .ந.பாலசுப்பிரமணியம் ஆகியோரே இவ்வாறு கெளரவிக்கப்பட்டவர்களாவார்.
அத்துடன் இதன்போது பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியுள்ள ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரும், பெளதீகத் துறையைச் சேர்ந்த மாணவியொருவரும், கூட்டுறவுப் பணியாளர்களும் சிறப்புப் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment