நத்தார் புதுவருடத்தை முன்னிட்டு டிசம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி முதலாம் திகதி வரை நல்லுாரில் அமைந்துள்ள செயல் திறன் அரங்கில் தினமும் மாலை 6.30 மணி தொடக்கம் 8.30 மணி வரை சிறுவர்களை மகிழ்விப்பதற்காக நான்கு பொம்மை நாடகங்கள் மேடையேறுகின்றன.
நேற்று 26 ஆம் திகதி ‘கொண்டைச் சேவலார்’, ‘நாங்கள் காற்று’ ஆகிய பொம்மை நாடகங்களும், 27 ஆம் திகதி இன்று ’பாட்டி’,’பசுவும் புலியும்' ஆகிய இரு நாடகங்களும் மேடையேற்றப்பட்டன.
தொடர்ந்து முதலாம் திகதி வரையில் இந்த நாடகங்கள் மேடையேற்றப்பட உள்ளன.
இந்த நாடகங்களை ஏராளமான சிறுவர் சிறுமியர் குதூகலத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.
முன்பதிவு தொடர்புகளுக்கு - 0212216061
மின்னஞ்சல் முகவரி: jaffnatheatre@gmail.com
நாடகம் இடம்பெறும் முகவரி: 203/2 Kachchery Nallur Road, Nallur, Jaffna
பெற்றோர்களே மிக அரிய வாய்ப்பு.... சிறுவர்களை அழைத்து வர மறந்து விடாதீர்கள்...
சிறுவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவங்களை நாடகங்கள் மூலம் வழங்கிவருகின்ற செயல் திறன் அரங்க இயக்கம் இந்த ஆண்டு புதிதாக முற்றிலும் வேறுபட்ட நாடக வடிவத்தில் சிறுவர்களுக்கான நாடகங்களை தயாரித்து மேடையேற்றி வருகிறது.
வருடாந்தம் நல்லூர் திருவிழாக்காலத்தில் சிறுவர்நாடகங்களை தயாரித்து மேடையேற்றி வருகின்ற செயல் திறன் அரங்க இயக்கம் அந்த அனுபவத்தின் அடிப்படையில் மழைக்காலத்தில் மழலைகளுக்கான பாவைகள் அரங்கு என்ற இந்த நிகழ்வை ஒழங்கு செய்திருக்கின்றது.
தொடர்ச்சியாக ஏழுநாட்கள் நடைபெறுகின்ற இந்த நாடக விழா சிறுவர்களுக்கான அரிய வாய்ப்பாக அமையும். சிறுவர்களின் மகிழ்விற்க்கு ஏற்றதான கதைகள் ஆற்றுகை செய்யப்படுகின்றன. பொம்மைகளும் நிழற்பாவைகளும் விசேடமான மேடையில் நாடகமாடுகின்றன.
2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நாடக நிறுவமே செயல் திறன் அரங்க இயக்கமாகும். ஈழத்தின் தமிழ் நாடக வரலாற்றில் தனக்கெனவொரு தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கிறது. பல்வேறு வகைப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியிருக்கிறது.
சிறுவர் அரங்கில் விசேட கவனம் கொண்டு தரமான பல சிறுவர் நாடகங்களை தயாரித்து பலநூறு பாடசாலைகளில் பல்லாயிரம் மாணவர்கள் மத்தியில் மேடையேற்றி பாராட்டைப் பெற்றுள்ளது. எல்லாவற்றையும் தாண்டி சமூக, அரசியல் பிரச்சினைகளையும் நாடகமூடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றமை தனிச் சிறப்பு.
எம் மண்ணின் கலைஞர்களை ஊக்குவிப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
வீடியோ: மயூரப்பிரியன்
படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்
0 comments:
Post a Comment