//]]>

Wednesday, February 14, 2018

கிளிநொச்சியில் இளம் தாயொருவர் மர்ம மரணம்

கிளிநொச்சி வட்டக்கச்சிப்  பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாயொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை (14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்  வட்டக்கச்சி பத்து வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பாஸ்கரன் நிரோசா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

.கிராமத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்றுக்கு அயலவர்கள் சென்றிருந்த வேளையில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்குப் பின்புறமாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் மரண விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு ஏழு வயதான மகனும், ஒன்றரை வயது மகளுமுள்னர். சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கணவர் தொழிலுக்காகச் சென்றிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலமையிலான குழுவினரும், கிளிநொச்சி குற்றத் தடவியல் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment