வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவில் இலங்கை அரசாங்கத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை(23) சிறப்பாக நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில்
காலை-08.30 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் தேவாலயத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
கடந்த மே மாதம் புதிய தேவாலயத்துக்கான அடிக்கல் உத்தியோகபூர்வமாக நாட்டப்பட்டது. இந்த நிலையில் இத் தேவாலயம் ஆறுமாதங்களிற்குள் கடற்படையினரால் நிர்மாணிக்கப் பட்டுப் புதுப்பொலிவுடன் யாழ்.மறை மாவட்டக் கத்தோலிக்க திருச்சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேவாலயத் திறப்பு விழாவில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஐன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே,யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்
நாகலிங்கம் வேதநாயகன், இலங்கைக் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜய குணரட்ண, நூறு வரையான தமிழக மக்கள், யாழ்ப்பாணம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அருட் சகோதர, சகோதரிகள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment