மூதறிஞர் அமரர் சிற்பி சிவசரவணபவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வும் நூல் வெளியீடும் நாளை 24.12.2016 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் (யாழ். இந்துக்கல்லூரி அருகில்) இடம்பெறவுள்ளது.
செந்தமிழ் சொல்லருவி ச. லலீசன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் நூல் வெளியீட்டுரையினை ஞானம் மாதாந்த இதழின் ஆசிரியரான தி. ஞானசேகரன் நிகழ்த்தவுள்ளார்.
நூலின் நயப்புரையினை யாழ். பல்கலை இந்துநாகரிகத்துறை விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் ஆற்றுகிறார்.
சிறப்பு நினைவுப் பேருரையாக "ஈழத்தமிழ் சமூகத்தின் கூட்டு நினைவுக்கான வெளிகளை சாத்தியப்படுத்தல் - சில அவதானிப்புக்களும் முன்மொழிவுகளும்" எனும் தலைப்பில் யாழ். பல்கலையின் சிரேஷ்ட சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றுகிறார்.
இறுதியாக சிற்பி ஐயா இணையத்தள அங்குரார்ப்பணமும் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், நண்பர்கள் அனைவரையும் பங்கேற்று சிறப்பிக்குமாறு சிற்பி ஐயாவின் குடும்பத்தினர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment