உழைக்கும் மக்களின் பிரதிநிதிகள் பிரதேச சபைப் பதவிகளைப் பெறவேண்டும் என சட்டத்தரணி ஆ. இரகுபதி வலியுறுத்தியுள்ளார்.
வலி கிழக்குப் பிரதேச சபைக்கான தேர்தலில் சுயேட்சை அணியாக வாளிச் சின்னத்தில் போட்டியிடுகின்ற கா. கதிர்காமநாதன் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ். புத்தூரில் அண்மையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உழைக்கும் மக்களின் அபிவிருத்திக்கும், மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்களின் அணியிலிருந்து பிரதேசசபைக்குத் தெரிவாகும் பிரதிநிதிகளால் மாத்திரமே உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வலிகள், நெருக்கடிகளை உணர்ந்து, உண்மையாகப் பணியாற்ற முடியும்.
அந்தவகையில், இதுவரை மறைமுகமான யுக்திகள் மூலம் அரசியலில் பங்கெடுக்கும் உரிமை மறுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளைத் தாமே வென்றெடுக்க ஓரணியில் பல்வேறு தரப்பினருடைய ஆதரவுடன் திரண்டு நிற்பது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இந்த வரலாற்று இலக்கை அடைய அனைவரும் சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவு வழங்கவேண்டும். அது மக்கள் அதிகாரத்துக்கான பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும்.
உங்களின் பிரதிநிதிகளே உங்களின் சார்பாக பிரதேச சபையில் பங்கேற்கவேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்.
இவர்களின் வெற்றியானது எதிர்காலத்தில் வடக்கின் அரசியலில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியே தீரும் எனவும் அவர் மேலான நம்பிக்கை வெளியிட்டார்.
0 comments:
Post a Comment