//]]>

Friday, January 6, 2017

யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் 2151 மாணவர்கள்(Photo)

யாழ். பல்கலைக்கழகத்தின் இந்தவருடப் பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள்  பட்டம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி  அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை(06) முற்பகல்-09 மணியளவில்  யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைக்கழகப்  பட்டமளிப்பு விழா எதிர்வரும்  ஐனவரி- 10, 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பத்தாம் திகதி ஐந்து  அமர்வுகளாகவும், பதினொராம் திகதி நான்கு  அமர்வுகளாகவும்  இடம்பெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் மொத்தமாகப் பட்டம் பெற்றுக் கொள்ளவிருக்கிறார்கள்.

இவர்களில் 164 பேர் பின் பட்டப்படிப்புச் சான்றிதழைப்  பெறவுள்ளனர். 1471 உள்வாரி மாணவர்களும், 484 வெளிவாரி மாணவர்களும் பட்டம் பெறவுள்ளனர்.  மேலும் 32 மாணவர்களுக்கு டிப்ளோமா பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

இந்தப்  பட்டமளிப்பு விழாவின் முதலாவது நாள் அமர்வு காலை-09 மணி, முற்பகல்-10.30 மணி, முற்பகல்-11.30 மணி,  மதியம்-02 மணி,  பிற்பகல்-3.30மணி ஆகிய நேரங்களில் இடம்பெறும்..

இரண்டாம் நாள் அமர்வுகள் காலை-09 மணி , முற்பகல்-10.30 மணி, பிற்பகல்-01.30 மணி, பிற்பகல்-03 மணி ஆகிய நேரங்களில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளன என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment