//]]>

Wednesday, December 20, 2017

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்


வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடலொன்று நாளை வியாழக்கிழமை(21) காலை-09 மணி முதல் யாழ். பொது நூலகத்திற்கு அருகிலுள்ள முனியப்பர் கோவில் முன்பாக நடைபெறவுள்ளது. 

கடந்த-17 ஆம் திகதி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூக நிர்வாக உறுப்பினர்களுக்கிடையே யாழில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக்  கலந்துரையாடலில் எமது அரச நியமனங்களைப் பெறுவது தொடர்பில் பல்வேறு மிக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

இதன் பிரகாரம், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிற்கான முக்கிய கலந்துரையாடல் நாளை நடாத்துவதற்குத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment