யாழ். வடமராட்சி அண்ணாசிலையடி சுவிஸ் வாழ் மக்கள் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் சுவிஸ் நாட்டின் சூரிச்சில் கடந்த சனிக்கிழமை (03.06.2017) ஒன்றிய தலைவர் எஸ். கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இவ்வொன்றுகூடலின்போது, அண்ணாசிலையடி கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தலுக்கான செயற்பாடுகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கிராமத்தில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கிவரும் பாலர் பாடசாலைக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்காக காணி கொள்வனவு செய்து கட்டிடம் அமைப்பதென கடந்த ஆண்டு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதற்கமைவாக, சுவிஸ், இலண்டன், மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வசிக்கும் அண்ணாசிலையடி கிராம நலன்விரும்பிகளால் இதுவரை பதின்நான்கு இலட்சம் ரூபாய் நிதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு இக் கலந்துரையாடலின் போது நன்றி தெரிக்கப்பட்டது.
இக்கிராமத்தைச் சேர்ந்த அதிகளவான மாணவர்கள் கல்வி கற்கும் இம் முன்பள்ளி மிக நீண்ட காலமாக தற்காலிக கட்டிடத்தில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்கிவருகிறது . இதனால் மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலேயே கல்வி கற்றுவருகின்றனர்.
எனவே காணிக் கொள்வனவிற்கு மேலும் 6 இலட்சம் ரூபாய் நிதி பற்றாக்குறையாக உள்ளதால் இதுவரை நிதி உதவி செய்யாத உறவுகள் தங்கள் பங்களிப்புக்களை விரைவாக செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், பாடசாலைக்கான காணியினை கொள்வனவு செய்து நிரந்தர கட்டிடம் அமைக்கும் வேலைத் திட்டத்தினை துரிதமாக மேற்கொள்வதெனவும், ஏழாம் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தாங்கள் மேலும் 200 பிராங் நிதி பங்களிப்புக்களை செய்தல் எனவும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களால் முன்மொழியப்பட்ன.
அதற்கமைவாக பற்றாக்குறையாக உள்ள நிதியினையும் சேகரித்து காணிக்கொள்வனவை துரிதமாக மேற்கொள்ளும் முயற்சிகளை விரைவாக முன்னெடுப்பதென்றும், அடுத்த ஒன்று கூடல் எதிர்வரும் 14\10 \2017 அன்று நடாத்துவதெனவும் இவ்வொன்று கூடலில் ஏகமனதாக முடிவுகள் எடுக்கப்பட்டன.
0 comments:
Post a Comment